செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஜனவரி 2021 (11:40 IST)

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம்  ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கி வருகிறார்.

இப்படத்தை போவ் பிரசாத் சார்பில் பித்தரா நிறுவனம் தயாரிகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் எப்போது இப்படம் ரிலீஸாகும் எனகீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் ராங் தி படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் பொங்கல் வாழ்த்துகள் கூறி ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரும் இடம்பெற்றுள்ளதால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது