திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:35 IST)

இந்தியன்- 2 , பொன்னியின் செல்வன் படங்கள் கைவிடப்பட்டதா ? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

இயக்குநர் ஷங்கர் இந்தியன் -2 படத்தை இயக்கி வருகிறார். இப்படப்பிடிப்பில் நடந்த பெரிய விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொரோனா கால ஊரடங்கு காலமாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் எவனென்று நினைத்தாய் படத்தில் நடிக்கவும் பிக்பாஸை தொகுத்து வழங்கவும் சென்றுவிட்டார். அடுத்த  வருடம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் அதிலும் அதிலும் அவர் பிசியாக  இருப்பார் என்று தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஷங்கர் வேறு புதிய படத்தை இயககுதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து இந்தியன் -2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு கடிதம் எழுதியதாகவும் வந்ததிகள் வெளியானது.

அதேபோல் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் ஷுட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.  அதன்பின் அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தும்  மணிரத்னம் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.
 

இந்நிலையில், இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிப்பதால் இப்படம் குறித்த அப்டேட் இல்லாமல் ரசிகர்கள் குழப்பினர்.

இந்நிலையில்  படப்பிடிப்புகளை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இதற்காகத் திட்டமிட்டுவருவதாகவும் லைகா  நிறுவனம் கூறி வந்ததிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.