தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ்..வைரல் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் 'வாஷி' படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படம் ரிலீஸான தியேட்டரில் கீர்த்தி சுரேஷ் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது..
இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரெஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாஷி. இப்படத்தில் இருவரும் வக்கீலாக நடித்துள்ளனர் . இப்படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ஜி.சுரேஷ்குமார் மற்றும் ரேவதி கலான் மந்திர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படம் வெளியான தியேட்டர்களில் ஒன்றான எடப்பள்ளி வனிதா தியேட்டரில் கீர்த்தி சுரேஷ் நேரடியாக சென்று ரசிகர்களைச் சந்தித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.3