1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 13 டிசம்பர் 2018 (20:39 IST)

இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். அந்த படம் சுத்தமாக ஓடவில்லை. இப்படத்தை தொடர்ந்து என்ன மாயமோ, மந்திரமோ தெரியல அடுத்தடுத்து படங்கள் புக் ஆகின. 
 
ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 என கலக்கு, கலக்கு என கலக்கினார் கீர்த்தி. மற்ற நடிகைகள் பல வருடங்களாக போராடி பெற்ற புகழை சில படங்களிலேயே பெற்றார் கீர்த்தி. 
 
இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த சாவித்திரியின் பயோகிராபியான நடிகையர் திலகம் படம் கிடைத்தது. இந்த படத்தில் புகுந்து விளையாடினார் கீர்த்தி. விளைவு, சிறந்த நடிகைக்கான விருதினை ஆந்திர அரசு கூப்பிட்டு கொடுத்தது.  
 
இப்படத்தில் இவர் நடித்ததை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை, இந்நிலையில் IMDB என்ற வெளிநாட்டு தளம் ஒன்று இந்தியாவின் சிறந்த 10 படங்களில் மகாநதிக்கு 4வது இடத்தை கொடுத்துள்ளது.
 
இதோடு டுவிட்டரில் கீர்த்தி 2 மில்லியன் பாலோவர்ஸை பெற்றுள்ளார், இதனால் கீர்த்தி சுரேஷ் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.