1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (22:00 IST)

இது.. அது.. இல்ல; பதறிய கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நுழைந்த குறைந்த காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.


 
 
தற்போது, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
 
மகாநதி படம் தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிறது. இந்த படத்தில் சமந்தா, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நாக் அஷ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 
இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த புகைப்படங்கள் மகாநதி படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என கூறப்பட்டது.
 
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இது ஜவுளிக் கடையின் விளம்பர ஷூட்டிங். மகாநதி படம் இனிமேல்தான் வரும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.