வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:05 IST)

விஜய் உங்களை பாராட்ட மாட்டேன் - இயக்குனர் சேரன்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். 


 

 
அவரது மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அந்நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் அரியலூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர் அனிதாவின் வீட்டில் கீழே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
 
இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது.. பாராட்டமாட்டேன். ஏனெனில் இது உங்கள் கடமை. தொடருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.