1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (23:25 IST)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது 99 சாங்ஸ் படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்திள்ள திரைப்படம் 99 சாங்ஸ். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார் ரஹ்மான். ஏஹான் பட் மற்றும், எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.14 பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இசை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.

அதே போல படம் இந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ரஹ்மான் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், 99 சாங்ஸ் படத்திற்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில்  தற்போது கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது 99 சாங்ஸ் படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் சார் மற்றும் 99 சாங்ஸ் படக்குழுவினருக்கு நல்வாழ்த்துகள். இந்த அழகான மாலையில் நானங்கு இருந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  எனக் குறிப்பிட்டுள்ளார்.
 இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது.