திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (17:02 IST)

காஜலுடன் போட்டிபோடும் கீர்த்தி சுரேஷ்

காஜல் அகர்வாலைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் படத்தின் ஷூட்டிங்கும் ஐரோப்பாவில் தொடங்க இருக்கிறது.


 


 
விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு கோலிவுட் மார்க்கெட்டைப் பிடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், டோலிவுட்டில் மார்க்கெட்டைப் பிடிக்க அல்லாடுகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் பழம்பெருமை நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருபவர், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த நிலையில், பாடல் காட்சிகளைப் படமாக்குவதற்காக ஐரோப்பா செல்கிறது படக்குழு. அங்கு, பவன் கல்யாணும், கீர்த்தி சுரேஷும் சேர்ந்து குத்தாட்டம் போடும் இரண்டு பாடல்களைப் படமாக்க இருக்கின்றனர். விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘வேதாளம்’ என ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படங்களில் காஜல் தான் ஹீரோயின். அவரைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் ஐரோப்பா செல்கிறார்.