திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (19:17 IST)

இரண்டாவது முறை அனுஷ்காவிற்கு அடித்த அதிர்ஷ்டம்!!

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். அவர் நடிப்பில் தற்போது பாக்மதி என்ற படம் வெளியாகவுள்ளது. 


 
 
டோலிவுட்டில் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. தற்போது 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 
 
2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் விருதை பெருகிறது பாகுபலி. இயக்குனர் ராஜமௌலி 2014 ஆம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான பி.என்.ரெட்டி மாநில விருதை பெறுகிறார்.
 
2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அனுஷ்கா சைஸ் ஸீரோ படத்திற்காக பெறுகிறார். அனுஷ்கா நந்தி விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். 
 
ஏற்கெனவே அருந்ததி படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இந்த விருதை பெற்றுள்ளார். நயன்தாராவும் நந்தி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.