சம்யுக்தாவிடம் மன்னிப்பு கேட்ட கவிதா ரெட்டி: முடிவுக்கு வருமா பார்க் பிரச்சனை?

சம்யுக்தாவிடம் மன்னிப்பு கேட்ட கவிதா ரெட்டி
siva| Last Updated: திங்கள், 7 செப்டம்பர் 2020 (08:50 IST)
சம்யுக்தாவிடம் மன்னிப்பு கேட்ட கவிதா ரெட்டி
சமீபத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கும், காங்கிரஸ் பிரமுகர் கவிதா ரெட்டிக்கும் இடையே பெங்களூரு பூங்கா ஒன்றில் நடந்த மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து சம்யுக்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் கவிதா ரெட்டி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து கவிதா ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றும் சம்யுக்தாவிடம் தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் பெண்களை மிகவும் மதிப்பவர்களில் நானும் ஒருவர் என்றும் பெண்களுக்கு ஏற்படும் அவமதிப்புகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆன நிலையில் கவிதா ரெட்டியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக சம்யுக்தா ஹெக்டேவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :