வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:50 IST)

நான் சும்மா இருந்தா சும்மா இருக்கமாட்டேன் பழி வாங்குவேன் - கவின் வெளியிட்ட வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று மாபெரும் பிரபலடைந்தவர் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிக்பாஸ் வாய்ப்பை கைப்பற்றிய இவர் பிக்பாஸில் நுழைந்த ஆரம்பத்தில் சாக்ஷி,     அபிராமி , லாஸ்லியா என ஒருவரையும் விட்டு வைக்காமல் காதலில் விழுந்தார்.

பின்னர் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி கிசுகிசுக்கப்பட்டார். அந்நிகழ்சச்சிக்கு பிறகு தொடர்ந்து அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் கவின் தனது சமூகவலைத்தளத்தில் " சில வருஷத்திற்கு முன்பு அரசாங்க உத்தரவு இல்லாமல் நானே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். அப்போ செய்த வேலை தான் இது.. நான் சும்மா இருந்தால் சும்மா இருக்கமாட்டேன் பழிவாங்குவேன் என கூறி தன் பேண்டை அழுக்கு செய்த நண்பனின் பேண்டை பதிலுக்கு என்ன செய்கிறார் என பாருங்கள்.