1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:10 IST)

சரக்கடிச்சு 45 நாள் ஆகுது, நான் திருந்திட்டேன்… மேடையில் ஓப்பனாக பேசிய விமல்!

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் தற்போது விமல் துடிக்கும் கரங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேலுதாஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நடிகர் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய விமல் “இந்த படம் நான் எந்த படமும் ஒப்பந்தமாகாமல் இருந்த போது வந்த படம். படத்தில் ரோபோ ஷங்கர் நடித்துள்ளார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ரொம்ப வருத்தமாக இருந்தது. அவரைப் பார்த்து பலர் இப்போது திருந்தியுள்ளனர். பலரும் அவரால் குடியை விட்டுள்ளனர். நானும் 45 நாட்களாக குடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நானும் திருந்திவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.