புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (22:42 IST)

'அந்த கருப்பு காக்கா': கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்த கவின்!

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவுக்கு பின் அபிராமி-முகின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முகின் மீது தவறு இல்லை என தர்ஷன், சாண்டி ஆகியோர் கூற, அபிராமி மீது தவறு இல்லை என மதுமிதா, ஷெரின் கூற வனிதாவோ இருவரும் மீதும் தவறு உள்ளது. எனவே இனிமேல் இருவரும் பிரிந்துவிடுங்கள் என்று கூறுகிறார்.
 
இந்த நிலையில் கஸ்தூரி இடையிடையே கருத்து சொல்வதாக கூறி பிரச்சனையை மேலும் வளர்ப்பதாக சக போட்டியாளர்கள் மனதில் தோன்றுகிறது. எனவே முகினை தனியாக அழைக்கும் கவின், 'வனிதா ஒருசில விஷயங்களில் நியாயமாக பேசுகின்றார்கள். ஆனால் இந்த கருப்பு காக்கா இருக்கே, அது பிரச்சனையை மேலும் பெரிதாக்குது. அதனால, அது என்ன வந்து கேட்டாலும் பதிலே சொல்லாதே' என கஸ்தூரி குறித்து கூற முகின் அதற்கு ஆமாம்சாமி' போடுகிறார்.
 
மொத்தத்தில் முகின் - அபிராமி இன்று பெரிய பிரச்சனையாக உருவெடுத்தாலும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இருவரும் காதலர்கள், ஏன் நண்பர்கள் கூட இல்லை என்று முடிவெடுத்தாகிவிட்டது. இதுவரை தான் செய்த தவறுகளுக்கும் அபிராமி முகினிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இருப்பினும் வனிதாவும், கஸ்தூரியும் இருக்கும்வரை இந்த பிரச்சனை மீண்டும் இருக்குமா? அல்லது வேறு பிரச்சனையை வனிதா ஆரம்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்