1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (12:35 IST)

பிக்பாஸ் வீட்டில் காதல் கலவரம் - எல்லாத்துக்கும் வனிதா தான் காரணம்!

பிக்பஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது.   


 
ஆராத் வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டி  அட்வைஸ் கொடுத்து வருகிறார்.   அந்தவகையில் இன்று அபிராமியின் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்று கூறி அவரை ஏத்திவிட்டு முகன் ராவ் அபிராமிக்கு இடையில் சண்டை வரவைத்து விட்டார். 
 
இந்த விவகாரத்தில் அபிராமிக்கு முகன் ராவ்விற்கும் வாக்குவாதம் முற்றியது. ஏற்கனேவே நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, முகன் ராவ்விற்கு,  தான் பேசிக்கொண்டிருக்கும் போது யாராவது இடையில் குறுக்கிட்டு பேசினால் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும். பின்னர் தன் கையில் கிடைப்பது எதுவானாலும் உடைத்து நொறுக்கிவிடுவார். 
 
இந்நிலையில் தற்போது வனிதா அட்வைஸ் கூறியதில் விழித்துக்கொண்ட அபிராமி, முகன் ராவ்வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட சடாலென்று முகின் கோபப்பட்டு அமர்ந்திருந்த சேரை தூக்கி அடியடிக்க முற்பட்டார். பின்னர் வீட்டிலிருந்த சக போட்டியாளர்கள் அவர்களை சமாதான படுத்தினர். கோபம் குறைந்ததும் முகன் தனியாக சென்று கண் கலங்கி அழுவுகிறார். 
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் வனிதா வனிதான்னு கேட்டுட்டு இருந்தீங்களே.. இப்போ பாருங்க.. நல்லா இருந்த குடும்பத்தை எப்படி ஏத்தி விட்டு வேடிக்கை பார்குறா..என கோபத்துடன் சிலர் கூறி வந்தாலும் ஒரு சிலரோ ... இதத்தா நாங்கள் எதிர்பார்க்கிறோம் ... இப்படியே நிகழ்ச்சியை இன்டெஸ்ட்டிங்கா கொண்டுபோங்க என கிண்டலடித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.