ஒரே நாளில் முடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்!

Last Modified புதன், 26 ஜூன் 2019 (08:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கவின் மீது தனது காதல் இருப்பதாகவும் விரைவில் அந்த காதலை தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த அபிராமி, அந்த காதலை ஏற்க முடியாது என்று கவின் நேருக்கு நேர் சொல்லிவிட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
முதல் நாள் முடிவின்போது ஷெரின், சாக்சி ஆகிய இருவரிடமும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே கவின் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும், தாங்கள் இருவரும் ஃபேஸ்புக் நண்பர்கள் என்றும், கவின் மீது தனக்கு இருப்பது காதல் தான் என்பதை நேரில் பார்த்ததும் புரிந்து கொண்டதாகவும், ஆனால் கவின் இதை எப்படி எடுத்து கொள்வார் என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சாக்சி, ஷெரின் கொடுத்த நம்பிக்கையில் கவினிடம் நேரடியாகவே அபிராமி தனது காதலை தெரிவித்துவிட்டார். ஆனால் கவின், அபிராமியின் காதலை நாகரீகமாக மறுத்துவிட்டார். இந்த வீட்டில் மற்ற பெண்களுடன் பழகுவதுபோல் தான் உன்னிடமும் பழகுவதாகவும், தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றும் தெளிவாக கூறிவிட்டார்

மேலும் காதலிக்கும் அளவுக்கு நான் நல்ல பையன் இல்லை என்றும், என்னுடன் ஒரு ஐம்பது நாட்கள் பழகினால் இவன் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான் என நீயே ஓடிவிடுவாய் என்றும் கவின் தெரிவித்தார். கவினின் இந்த பதில் அபிராமிக்கு ஏமாற்றத்தை கொடுத்தபோதிலும் சமாதானம் அடைந்துவிட்டதாகவும், கவின் சொல்வதை புரிந்து கொண்டதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்த காதல் ஏமாற்றம் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :