1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (20:07 IST)

பிக்பாஸ் கவினின் அடுத்த படத்தில் நாயகியாகும் ‘பீஸ்ட்’ நடிகை!

பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகை நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் நடித்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து அவர் அஜித்தின் 61வது படத்திலும் கவின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அம்பேத்குமார் என்பவர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் கவின் ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார் 
 
இவர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இயக்குபவர் கணேஷ்பாபு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது