1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (18:20 IST)

கவின் - நெல்சன் படத்தின் புரமோ வீடியோ ரிலீஸ்.. டைட்டில் என்ன தெரியுமா?

இயக்குனர் நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்நிறுவனத்தின் முதல் படத்தில் கவின் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தின் வைரல் ஆகி வருகிறது. 
 
நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் ’பிளடி பெக்கர்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று விட்டதாகவும் தெரிகிறது. 
 
மேலும் மேலும் வழக்கம் போல் தனது படத்திற்கு காமெடியான உரையாடலை ப்ரோமோ வீடியோவாக வெளியிடும் நெல்சன், இந்த படத்திற்கும் ஒரு நான்கு நிமிட ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின் மற்றும் சிவபாலன் முத்துக்குமார் ஆகியோர் உரையாடும் காட்சியும் அந்த வீடியோவில் இறுதியில் கவின் பிச்சைக்காரன் லுக்கில் இருப்பது போன்றும் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Mahendran