1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:10 IST)

லேட்டானதும் ரொம்ப நல்லதா போச்சு… காத்து வாக்குல ரெண்டு காதல் தயாரிப்பாளர் ஹேப்பி!

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை.

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட படம்தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

வழக்கமாக இதுபோல படம் தாமதமானால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நஷ்டம் ஏற்படும். ஆனால் காத்து வாக்குல படத்தின் தயாரிப்பாளருக்கு இந்த தாமதம் லாபத்தைதான் கொடுத்துள்ளதாம். ஏனென்றால் இந்த படத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதி,நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரின் மார்க்கெட் தொடங்கப்பட்டதை விட இப்போது பல மடங்குகள் பெரிதாகியுள்ளதாம். அதனால் படத்தின் மீதான டிமாண்டும் இப்போது அதிகமாகிவிட்டதாம். அதனால் படத்தின் வியாபாரம் முன்பு கணக்கிடப்பட்டதை விட அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.