1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:38 IST)

காத்து வாக்குல ரெண்டு காதல்… சிறப்புக் காட்சிகளுக்கு எகிறும் டிமாண்ட்… வெளியான தகவல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு சிறப்புக் காட்சிகள் ஓபன் செய்யப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமாம். கிட்டதட்ட 33 கோடி ரூபாயில் இந்த படம் உருவாகியுள்ளதாம். அதே போல அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாகவும் KRK படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் டிரைலர் டீசர் ஆகியவற்றுக்குப் பிறகு படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சென்னையில் பல திரைகளில் இந்த படத்துக்கான சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ரோஹினி திரையரங்கில் ஏற்கனவே காலை 4 மணிக் காட்சிகளுக்காக இரண்டு திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு காட்சிகளும் முன்பதிவு உடனே முடிந்துவிட்ட நிலையில் இப்போது மூன்றாவது திரையும் காலை 4 மணி சிறப்புக் காட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.