புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (16:57 IST)

சம்பளத்தை கொடுத்துவிட்டது விஜய்டிவி: முடிந்தது கஸ்தூரி பஞ்சாயத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பள பாக்கியை தனக்கு இன்னும் விஜய் டிவி தரவில்லை என நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு விஜய் டிவியும் சரியான விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பள பாக்கியை விஜய் டிவி நிறுவனம் செட்டில் செய்து விட்டது என்று கஸ்தூரி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே கஸ்தூரிக்கும் விஜய் டிவி க்கும் இடையிலான சம்பள பிரச்சனை தீர்ந்து விட்டதாக தெரிகிறது 
இது தொடர்பாக கஸ்தூரி தனது டுவிட்டரில் ’விஜய் டிவி எனக்கு எந்த பாக்கியும் வைக்கலன்னு பிரஸ் ஸ்டேட்மென்ட் குடுத்தாங்களே, அந்த சம்பள பாக்கிய கொடுத்துட்டாங்க. ஒரு வருஷம் தாமதம்தான் ஆனாலும் தீபாவளி நேர செலவுக்காகவும், நன்றி விஜய் டிவி எங்கள் குடும்பங்களுக்கு உதவியதற்கு’ என்று கஸ்தூரி கிண்டலுடன் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.