திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (08:17 IST)

தமிழ்நாட்டில் செட்டில் ஆகப்போறேன் - ஸ்ரீரெட்டி பேட்டி

சினிமா வாய்ப்பிற்கான பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும். ஆனால், தன்னை பயன்படுத்திவிட்டு யாரும் வாய்ப்பு தரவில்லை என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.   
 
சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆந்திராவில் என்னை ஏமாற்றியவர்கள் தொடர்பாக ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆந்திர அரசும் இதை கண்டுகொள்ளவில்லை. எனக்கு அங்கே பாதுகாப்பும் இல்லை. அதனால்தான், சென்னை வந்துள்ளேன். நடிகர் சங்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். சங்க தலைவர் விஷால் மற்றும் கார்த்தியிடம் ஆதரவு கேட்பேன். தமிழகத்தில் செட்டில் ஆகப்போகிறேன்” என தெரிவித்துள்ளார்.