"மதுமிதா விவகாரத்தில் சம்மந்தப்பட்டது இந்த இருவர் தான் " கஸ்தூரியின் அனல் பறக்கும் பேட்டி!

Last Updated: சனி, 31 ஆகஸ்ட் 2019 (14:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்த கஸ்தூரிக்கு  ஓட்டுக்கள் குறைந்ததால் வெளியேற்றப்பட்டார். 


 
பொதுவாக பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்கள் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்று. இதற்காக அந்த தொலைக்காட்சியே  ஏற்பாடு செய்து அவர்கள் சொல்லும் மீடியாவுக்கு தான் பேட்டியளிப்பார்கள் இது பிக்பாஸின் கண்டீஷன்களில் ஒன்று. 
 
அந்தவகையில் தற்போது கஸ்தூரி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது, வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் போல் தான் இருக்கின்றனர். அவர்களை ஆட்டி வைப்பது பிக்பாஸ்தான். மக்களுக்கு இதுதான் தேவை என முடிவு செய்து பிக்பாஸ் சிலவற்றை மட்டுமே காட்டுகிறார். 
 
பிக்பாஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன கொடுக்கிறது என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் மனிதராகவும் மனித தன்மையுடனும் நடந்து கொள்வது சேரன் மட்டும்தான். மற்றவர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை. மதுமிதா பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெரின் மற்றும் லாஸ்லியா தான். முக்கியமாக சம்பந்தப்பட்டவர் ஷெரின் தான். நீங்கள் மறுபடியும் மறுபடியும் மீண்டும் என் வாயை கிளறீங்க. நான் பேசியதை நீங்க காட்டவில்லை. என்று கூறி கோபட்டார் கஸ்தூரி. 


இதில் மேலும் படிக்கவும் :