1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2024 (12:46 IST)

கங்குவா தோல்வியால் அதிகம் வருத்தத்தில் இருப்பது கார்த்திக் சுப்பராஜ்தானா?

சூர்யா நடப்பில் உருவான  ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி புஸ்வானமாகியது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இதனால் 2000 கோடி ரூபாய் வசூலை எதிர்பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு 100 கோடி ரூபாயாவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். படம் வெளியாகி மூன்றே வாரங்களில் ஓடிடியிலும் ஸ்ட்ரீம் ஆகிவிட்டது.

இந்நிலையில் கங்குவா படத்தின் தோல்வியால் அதிகமும் வருத்தத்தில் இருப்பது கார்த்திக் சுப்பராஜ்தானாம். ஏனென்றால் கங்குவா படத்தின் தோல்வி அடுத்து அவர் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூர்யா 45’ படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கிறதாம். பெரிய தொகைக்கு வியாபாரம் செய்யலாம் என நினைத்திருந்த கார்த்திக் சுப்பராஜுக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.