கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இலங்கைப் போர் குறித்து உருவாகும் ‘நீளிரா’
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பீட்சா, ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவர் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் சார்பாக இலங்கையைச் சேர்ந்த சோமிதரண் இயக்கும் நீளிரா என்ற படத்தை தயாரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிய படமாக நீளிரா உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ் “இந்த படம் கண்டிப்பாக உங்கள் இதயத்தைத் தொடும்” எனக் கூறியுள்ளார். இந்த படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.