ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (07:22 IST)

நான் சொன்ன இரண்டு கதையுமே விஜய்க்கு பிடிக்கவில்லை… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போது தொடர்ச்சியாக விஜய், இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் விஜய்க்கு கதை சொன்ன அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “நான் இரண்டு கதைகளை தளபதி விஜய்க்கு சொன்னேன். அந்த இரண்டு கதைகளுமே அவருக்கு பொருந்தவில்லை. அவருக்கு அந்த கதைகள் பிடிக்கவில்லை. விரைவில் அவருக்கு பிடித்தமான கதைகளோடு அவரை சந்திப்பேன்” எனக் கூறியுள்ளார்.