திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (08:54 IST)

இந்தியன் 2 வில் இணையும் நடிகர் கார்த்திக்?… யாருக்கு பதிலாக தெரியுமா?

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடித்த கலைஞர்களான விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் இடையில் இயற்கை எய்தினர். இந்நிலையில் அவர்களின் கதாபாத்திரத்துக்கு பதிலாக இப்போது வேறு நடிகர்களை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நெடுமுடி வேணு கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.