திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:13 IST)

இந்தியன் 2: காஜல் அகர்வாலுக்கு பதில் இந்த நடிகையா?

indian 2
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் பயிற்சி எடுத்து திரும்பி வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த நிலையில் தற்போது அவர் திருமணமாகி குழந்தை பெற்றதால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் காஜல்அகர்வால் கேரக்டரில் நடிக்க தீபிகா படுகோன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அதே போல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் காலமாகி விட்டதால் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன