1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (16:04 IST)

இந்தியன் 2 படத்தில் வெளியேறிய கலைஞர் மீண்டும் உள்ளே… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

இந்தியன் 2 படத்தில் இருந்து முன்னணி ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியன் 2 திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஆனதால் படத்தில் ஒப்பந்தம் ஆன ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தில் இருந்து விலகினார். இதனால் ரத்தினவேல் இந்தியன் 2 படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். மற்ற படங்களுக்காக படத்தில் இருந்து ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.