புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (15:59 IST)

பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய விருப்பம் காட்டும் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் படங்களுக்கு என்று ஒரு இலக்கணத்தை உருவாக்கிய திரைப்படங்களில் பாட்ஷாவும் ஒன்று.

1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம் அவரின் சினிமா வாழக்கையில் மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் திரைக்கதை அமைப்பை அப்படியே காப்பி அடித்து தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பல படங்கள் வந்துவிட்டன. பல முன்னணி நடிகர்களின் அந்த கதைகளில் நடித்து விட்டனர். ஆனால் பாட்ஷாவை எந்த படத்தாலும் நெருங்க முடியவில்லை.

இந்நிலையில் நடிகர் கார்த்தி பாட்ஷா படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நடிகர் என்னிடம் எந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை எனக் கேட்டார். அப்போது நான் பாட்ஷா எனக் கூறினேன். பாட்ஷா ரீமேக்கில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த படத்தை சரியாக எடுப்பதில் சவால்கள் உள்ளன. ரஜினியை எந்த இடத்திலும் பிரதிபலிக்க முடியாது.பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்யவேண்டும். ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
Source குமுதம்