ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (14:30 IST)

கைதி 2 படம் எப்போது? நடிகர் கார்த்தியின் பதில் இதுதான்!

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

இப்போது மீண்டும் விஜய் படத்தை இயக்கி வரும் அடுத்து ரஜினி நடிப்பில் தலைவர் 170 படத்தை இயக்க உள்ளார். இதனால் அவரின் இயக்கத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் கைதி 2 திரைப்படம் இப்போதைக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கைதி 2 பற்றி பேசியுள்ள நடிகர் கார்த்தி “கைதி 2 திரைப்படம் கண்டிப்பாக வரும். அதற்கான காலம் வரும்” எனக் கூறியுள்ளார். இப்போது ஜப்பான் படத்தை முடித்துள்ள கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.