1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:10 IST)

முதல் முதலாக தமிழ்- தெலுங்கில் பாடியுள்ள கார்த்தி… அதுவும் அவர் படத்துக்கு இல்லை!

நடிகர் கார்த்தி சர்வானந்த் மற்றும் அமலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் கணம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இரண்டு பாதைகளிலும் வெற்றிகரமாக செயல்படுபவர் எஸ் ஆர் பிரபு. ஒரு பக்கம் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களைத் தயாரித்தாலும் மறுபக்கம் அருவி, மாயா போன்ற படங்களையும் தயாரித்து வருபவர்.

இந்நிலையில் குறும்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் சர்வானந்த் நடிக்கும் கணம் என்ற படத்தை இப்போது தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மூத்த நடிகை அமலா மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகை அமலா 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்காக நடிகர் கார்த்தி ஒரு பாடலை தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் பாடி அதற்கான ப்ரோமோவிலும் நடித்துள்ளார். ஏற்கனவே பிரியாணி படத்தில் மிஸ்ஸிசிப்பி பாடலை கார்த்தி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.