வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:39 IST)

எம் ஜி ஆராக மாறும் கார்த்தி… அந்நியன் பாணியில் நலன் குமாரசாமி இயக்கும் புதிய படம்!

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்துபோகும் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகப் போகிறது.

சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.  முதலில் ஆர்யா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் கார்த்தி அந்நியன் விக்ரம் போல ஸ்பிலிட் பர்சனாலிட்டி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அடிக்கடி தன்னை எம் ஜி ஆராக மாற்றி நினைத்துக் கொள்ளும் நபராக கார்த்தி இதில் நடிக்க உள்ளாராம்.