தொடங்கியது அயலான் படத்தின் வியாபாரம்.. சாதனை படைத்த வெளிநாட்டு உரிமை!
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை மற்றும் கிராபிக்ஸ் பணிகளின் தாமதம் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் படத் தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பாக பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்போது டிசம்பர் 26 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீடு நடக்கும் என கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கு முன்பாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை இப்போது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு இல்லாத அளவுக்கு 12 கோடி ரூபாய்க்கு இந்த உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.