“பையா 2 படத்தில் நடிக்க கார்த்தி இந்த காரணத்துக்காகதான் யோசிக்கிறார்” – இயக்குனர் லிங்குசாமி!
லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பையா. கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இந்த படம். இந்த படத்தின் ஹிட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தன. இன்றளவும் கொண்டாடப்படும் ஆல்பமாக பையா உள்ளது.
மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பையா. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் லிங்குசாமி “பையா 2 திரைக்கதையை கார்த்தியிடம் கொடுத்துவிட்டேன். அவர் தற்போதுள்ள முதிர்ச்சியான தோற்றத்தால் அந்த கதையில் நடிக்க வேண்டுமா என யோசிக்கிறார். அவர் நடிக்கவில்லை என்றாலும் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கும்படிதான் திரைக்கதையை எழுதியுள்ளேன். விரைவில் பையா 2 அப்டேட் வரும்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் பையா வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து இப்ப்போது அந்த படம் ரி ரிலீஸ் ஆக உள்ளது. இப்போது ரி ரிலீஸ் படங்கள் நல்ல வெற்றியைப் பெரும் நிலையில் அந்த ரேஸில் பையா திரைப்படமும் இணைய உள்ளது. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.