1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (21:59 IST)

ரூ.30,000 மதிப்புள்ள வாட்டர் பாட்டில்: கார்த்தி கொடுத்த பரிசு

karthi
சர்தார் படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சர்தார்’. இந்த படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் கார்த்தி படக்குழுவினர் அனைவருக்கும் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளியினாலான வாட்டர் பாட்டில் வழங்கியுள்ளார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva