வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:03 IST)

காந்தாரா படக்குழுவினரை பாராட்டிய தனுஷ்!

கேஜிஎஃப்-1 ,2 ஆகிய படங்களுக்குப் பின் கன்னட சினிமாவின் மீது சினிமா ரசிகர்கள் பார்வை குவிந்துள்ளது. பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் காந்தாரா.

இப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.  இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ளார்.


இப்படம் வரும்  அக்டோபர் 15( நாளை) தமிழகத்தில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது.

kanatara

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த  நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில்  காந்தரா படம் மைண்ட் புளோயிங்காக உள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டும். ரிஷப் ஷெட்டி   நீங்கள் உங்களை பெருமையாக கருத வேண்டும். வாழ்த்துகள். இப்படத்தில் நடித்த, பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியாளர்க்ளுக்கும் வாழ்த்துகள்; கடவுள் ஆசி எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj