வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (15:34 IST)

குடிபோதையில் ஆந்திர பிரபலத்திடம் அத்துமீறிய நடிகர் விமல்

சென்னையில் குடிபோதையில் இருந்த நடிகர் விமல், ஆந்திர நடிகரை தாக்கியதற்காக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, கேடிபில்லா கில்லாடி ரங்கா மன்சப்பை, மாப்ள சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விமல். முன்னணி நடிகராக ஆக விமல் சிரமப்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் சென்னை விருகம்பாகத்தில் தங்கி படம் ஒன்றில் நடித்து வரும் கன்னட நடிகர் அபிஷேக், நேற்று தனது அபார்ட்மெட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே குடிபோதையில் தனது நண்பர்களுடன் சென்ற விமலுக்கும் அபிஷேக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
 
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் விமல் அபிஷேக்கை தாக்கியுள்ளார். இதையடுத்து அபிஷேக் போலீஸில் புகார் அளித்ததையடுத்து போலீஸார் விமல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.