வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:06 IST)

உதயநிதி அழ, தமன்னா அழ, ஒரே அழுகையா போச்சு! குடுத்த காசுமேல கூவுறாங்களே வடிவுக்கரசி!

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடிகை தமன்னாவுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கிறார் . சமீபத்தில் நடந்த இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை வடிவுக்கரசி பேசியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 


 
'கண்ணே கலைமானே' படத்தில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். விவசாயத்தை காப்பாற்றும் கதாபாத்திரத்தில்  படம் முழுக்க வேட்டி-சட்டையில் நடித்திருக்கும் அவருக்கு ஜோடியான தமன்னா, கூட்டுறவு சங்க அதிகாரியாக நடித்துள்ளார்.  அவருக்கும் ஆர்கானிக் விவசாயிக்கும் இடையே இழையோடு மெல்லிய காதல் தான் கண்ணே கலைமானே படத்தின் கதை.
 
அண்மையில் நடந்த இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் வடிவுக்கரசி பேசியதாவது  , உதயநிதி ஸ்டாலினுடன் நான் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அவர் மிகவும் எளிமையானவர்.   மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் உதயநிதி ஸ்டாலின் அழும் காட்சியில் அவரை பார்த்து நான் அழுதுவிட்டேன். தமன்னா கிளிசரின் இல்லாமலே அழுது அவ்வளவு அற்புதமாக நடித்தாங்க என நடிகை வடிவுக்கரசி கூறியுள்ளார்.


 
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக,  யம்மா வடிவுக்கரசி குடுத்த காசுக்கு மேல கூவுறியேம்மா என நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர். 


வீடியோ லிங்க் இதோ!