திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 ஜூன் 2018 (13:18 IST)

வெளியே போராடிவிட்டு உள்ளே மாறுவேஷத்தில் 'காலா' படம் பார்த்த கன்னடர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்ததால் அந்த படம் ரிலீசுக்கு முந்திய நாள் வரை கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.
 
ஆனால் கடைசி நேரத்தில் நீதிமன்ற உத்தரவு காரணமாக 'காலா' படத்தை திரையிடும் திரையரங்குக்கு கர்நாடக அரசு பாதுகாப்பு அளித்ததை அடுத்து 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆனது.
 
இருப்பினும் 'காலா' திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனால் 'காலா' படத்தின் ரிசல்ட்டை கேட்டாதும் போராட்டம் செய்தவர்களே மாறுவேஷத்தில் படத்தை பார்த்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. கன்னட அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினியை திரையில் பார்க்க அவர்கள் மாறுவேஷம் போட்டதாக தெரிகிறது.