திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (12:55 IST)

அறம் படத்தில் பிடிக்காத விஷயங்கள்; பிரபல நடிகையின் ட்வீட்

கோபி இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான படம் அறம். இந்த திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்து  வருகின்றன. 
இப்படம் நடிகை, இயக்குனர் என்பதை தாண்டி அழுத்தமான கதையால் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. படமும் சென்னையில் மட்டும் ரூ. 1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், வீரியம் மிக்கதாக  இருந்தன. நிறைய பேர் பாராட்டிவரும் நிலையில், இப்படத்தை அண்மையில் பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், அறம் படம் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பராக இருந்தது என  கூயுள்ளார். படத்தில் 2 பிடிக்காத விஷயங்கள் இருக்கிறது. அது என்னவென்றால் இறுதியில் தங்கையை காப்பாற்றிய அண்ணன் தான் ஹீரோ, அவனை கொண்டாவில்லை என்பது வருத்தம். இரண்டாவது குழியில் இருந்து வெளியே எடுத்த அச்சிறுமிக்கு  மருத்துவ உதவி செய்யாமல் நயன்தாராவின் காலில் விழ வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.