1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (22:00 IST)

''கங்குவா'' VFX பிரச்சனை? சூர்யா சொன்ன ஆலோசனை

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார்.  இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். 
 
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டப்பிங் பணிகளை சூர்யா மேற்கொண்டார்.
 
பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் போஸ்டர்கள் முதலில் வெளியான போது இதுகுறித்து ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர். இதைக் கிண்டலடிக்கவும் செய்தனர்.
 
எனவே கங்குவா படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொண்டு வரும்  நிறுவனத்திற்கே இப்படத்தைக் குறித்து வெளியான விமர்சனங்கள், கருத்துகளை எல்லாவற்றையும் சூர்யா தெரியப்படுத்தினாராம்.
 
இனி அடுத்து வரும் போஸ்டர் மற்றும் டீசர் இதுபோன்று இல்லாமல் தரமாக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இன்று சூர்யா வெளியிட்ட கங்குவா பட போஸ்டர் எல்லோரும் ரசிக்கும் படி இருந்தது. இதையடுத்து, இன்று மாலையில் வெளியான கங்குவா பட டீசரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
 
இந்த டீசர் நன்றாக வந்ததற்கு சூர்யா, அந்த வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்திற்கு கூறிய ஆலோசனையும் காரணம் என்று கூறப்படுகிறது.