திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:39 IST)

சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளிப் போகிறதா?

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் வேட்டையன் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

அதனால் தேவையில்லாத க்ளாஷை தவிர்க்க கங்குவா திரைப்படத்தின் ரிலீசை அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்லாமல் அஜித்தின் கங்குவா திரைப்படம் ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.