1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:34 IST)

முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்குக் காரணம் கலைஞர் மேல் கொண்ட அன்புதான் – அமைச்சர் எ வ வேலு!

சமீபத்தில் நடந்த கலைஞர் பற்றிய வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார்.

அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் புத்தகத்தை எழுதிய எ வ வேலு பேசும்போது ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “ஷங்கர் முதல்வன் படத்தை எடுத்த போது அதில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். அதற்குக் காரணம் பெரியவர் கலைஞர் முதல்வராக இருக்கும்போது நான் இப்படி ஒரு படத்தில் நடிக்கக் கூடாது என்ற கலைஞர் மேல் வைத்த அன்புதான் காரணம்.” எனப் பேசியிருந்தார்.