வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (10:56 IST)

மகாராஷ்டிராவில் திரையரங்குகளை திறக்கவேண்டும்… கங்கனா வேண்டுகோள்!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என கங்கனா ரனாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கங்கனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள தலைவி படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஆனால் இந்தி சினிமா மார்க்கெட்டில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுள்ள மகராஷ்டிராவில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் தலைவியின் வியாபாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதைப் பற்றி பேசியுள்ள கங்கனா ரனாவத் ‘மகாராஷ்டிராவில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் திரையரங்குகளை திறந்து இறந்து கொண்டிருக்கும் திரையரங்க வியாபாரத்தைக் காக்க வேண்டும். மற்ற மக்கள் கூடும் பகுதிகள் எல்லாம் இயங்க அனுமதிக்கப்பட்டு விட்ட நிலையில் திரையரங்குகளின் மூலம் மட்டுமே கொரோனா பரவும் போல’ எனவும் கூறியுள்ளார்.