1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (15:20 IST)

தென்னிந்திய நடிகர்கள் பெருமையாக பதிவு செய்த கங்கனா ரனாவத்!

தென்னிந்திய நடிகர்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெருமையாக பதிவுசெய்து உள்ளார் 
 
தென்னிந்திய நடிகர் என்றாலே கலாச்சாரத்தில் வேரூன்றியவர்கள் என்றும் அவர்கள் தங்களின் குடும்பத்தினரை நேசிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் தென்னிந்திய நடிகர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தொழிலில் காட்டும் ஆர்வமும் ஈடு இணையற்றதாக இருக்கிறது என்றும் பாலிவுட் திரையுலகம் அவர்களை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அந்த பதிவில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா மற்றும் யாஷ் நடித்த கேஜிஎப் ஆகிய புகைப்படங்களையும் கங்கனா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
பொதுவாக தென்னிந்திய நடிகர்களை பாலிவுட் திரையுலகம் மதிப்பதில்லை என்று கூறப்படும் நிலையில் கங்கனா ரனாவத் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது