திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (15:17 IST)

எமர்ஜென்ஸி படத்தின் ரிலீஸில் தாமதம்… மும்பை பங்களாவை விற்ற கங்கனா!

சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம்  சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலிஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் சில தடவை அறிவிக்கப்பட்டு தாமதம் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளராக கங்கனா இப்போது பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.

இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள தன்னுடைய பங்களா வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்களாவை அவர் 32 கோடி ரூபாய்க்கு  கமலினி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஸ்வேதா பதிஜா விற்றுள்ளார்.