ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (12:31 IST)

கங்கனாவின் எமர்ஜென்ஸி படத்துக்கு இந்த மாநிலத்தில் தடையா?

சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீஸாகி சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

படத்தில் சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில சில நபர்கள் ஒரு வீடியோவில் கங்கனாவுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டது பதற்றமான சூழலை உருவாக்கியது.

இந்நிலையில் கங்கனாவின் எமர்ஜென்ஸி படத்துக்கு தடை விதிக்க தெலங்கானா மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.