1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (07:24 IST)

3ஆம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. அமித்ஷா உள்பட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டி..!

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 
 
இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் இன்று காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், காஷ்மீரில் உள்ள அனந்தநாக்-ரஜோரி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் நடைபெறவில்லை என்பதும் சூரத் பகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் பனி காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் அமித்ஷா உட்பட நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் மொத்தம் 1352 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva