1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (18:47 IST)

கங்கனாவின் 'மணிகர்ணிகா; நாளை வெளியாகிறது

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் துணிச்சல் மிக்க சுதந்திர போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையில் நடித்துள்ளார்.


 
மணிகர்ணிகா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை  ராதா கிருஷ்ணா இயக்கியுள்ளார்.  நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்,. நாளை (ஐனவரி 25) தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில்  வெளியாகிறது.
 
ஜான்சி ராணியின் இயர்பெயர் - மணிகர்ணிகா. 1857ம் ஆண்டு இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றினார் ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது - 29. 
 
இப்படத்துக்கு  ஷங்கர்  இசையமைத்துள்ளார்,  இஷான் - லாய். பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளார். கடந்த டிசம்பவர்  மணிகர்ணிகா டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக Kairos Kontent Studios தயாரித்துள்ளது.