வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (12:24 IST)

மீண்டும் டப்பிங், ரீ ரிக்கார்டிங்? புதிய காட்சிகள் சேர்ப்பு? – கலகலக்கும் பாபா அப்டேட்ஸ்!

baba-rajini
ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘பாபா’ படம் மீண்டும் ரிலீஸாக உள்ள நிலையில் புதிய காட்சிகள் சில சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2002ல் வெளியான படம் ‘பாபா’. அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? ஆன்மீகம் செல்வாரா? என்ற விவாதம் இருந்த நிலையில், அந்த விவாத்தையே கருபொருளாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பாட்ஷா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் அந்த சமயம் பெரும் வெற்றியை பெறவில்லை. ஆனால் சமீப காலமாக இந்த படம் குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ள நிலையில் இந்த படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ல் இந்த படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் சில புதிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பிண்ணனி இசை போன்றவற்றை ஏ.ஆர்.ரஹ்மான் சற்று மாற்றியமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 20 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் பாபா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K